இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள தமிழ் நாட்டை சேர்ந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பிரதி நிதிகளை இன்று(2009.10.13) கொழம்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் சந்தித்து கலந்தரையாடினர்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் தலைவரான முன்னாள்; இந்திய மத்திய அமைச்சரும்,திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவை,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,மிள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன்; கைலாகு கொடுத்து வரவேற்றார்.
பின்னர் இடம் பெற்ற சந்திப்பில் வடமாகாண முஸ்லிம்களின்; நிலை குறித்தும்,அவர்கள் இருபது வருடங்களாக தாயகமான மன்னார்,முல்லைத் தீவு,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை துறந்து,புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் பெரும் சிரமங்களுடன் வாழும் நிலை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தெளிவான விளக்கமொன்றை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.







0 Response to "இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு"
แสดงความคิดเห็น