jkr

மட்டக்களப்பில் சமூக மற்றும் மனித நேய பணிகளில் ஈடுபடுவோருக்கு விருது வழங்கி கௌரவம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மற்றும் மனித நேய பணிகளில் ஈடுபட்டு வரும் பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் என 8 பேர் ஸ்ரீ லங்கா மகா நிக்காயாவின் பிரதான சங்க நாயக்கர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமனரத்தன தேரோ மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதான சங்க நாயக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு மங்களராமய விகாரை முன்றலில் நடைபெற்ற போது சர்வ மதத்தின் ஊடாக சமாதானத்திற்காகவும் ,மனித நேயத்திற்காகவும் பாடுபட்டு வருவதை கௌரவிக்கும் வகையில் விகராதிபதிக்கு இவ் கௌரவம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் அதி.வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ,இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி ,மௌலவி ஏ.ஜி.எம்.இலியாஸ் ,இலங்கை அமெரிக்கன் மிஷன் தலைவர் அருட்கலாநிதி எஸ்.ஜெயநேசன் ,பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் கே.கணேஷ் ,அல் ஹாஜ் கே.எம்.எம். கலீல் ஆகியோர் உட்பட 8 பேர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மட்டக்களப்பில் சமூக மற்றும் மனித நேய பணிகளில் ஈடுபடுவோருக்கு விருது வழங்கி கௌரவம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates