jkr

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்!

இன்று முற்பகல் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஜோவிற்கும் அவருடன் வருகை தந்த அதிகாரிகளும் நூலக வாசலில் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி யாழ். மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஜோ நூலகத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்வையிட்டதுடன் 1981ம் ஆண்டில் இந்நூலகம் எரிந்த பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்வையிட்டார். புத்தகங்கள் இரவல் வழங்கும் பகுதி கணனிப் பிரிவு பருவகால இதழ்கள் அடங்கிய பகுதி விஷேட புத்தகச் சேகரிப்புப் பகுதி என்பனவற்றைப் பார்வையிட்டதுடன் இந்நூலகத்திற்கு வேண்டிய மேலதிகத் தேவைகள் குறித்தும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொருளாதாரத் துறையில் சிங்கப்ப+ர் வளர்ச்சியடைந்திருப்பதைப் போன்று இலங்கையின் பொருளாதாரமும் துரித வளர்ச்சியடைவதற்குத் தம்மால் முடிந்த உதவிகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலப் போர்ச் சூழலினால் வடபகுதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதினால் இப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்திற்கு எனச் சிங்கப்ப+ர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி நூல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கையளித்த சமயம் அந்நூல்களை அமைச்சர் யாழ்.மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கையளித்தார்.

இதேவேளை, யாழ்.நூலகத்திற்கு என சிங்கப்ப+ர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மற்றுமொரு தொகுதி நூல்கள் கொழும்பிலிருந்து நாளை யாழ்.நூலகத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.









  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates