முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு

தேவையான பொருட்கள்:
முருங்கைகாய் - 2,
தேங்காய் - 1/2 கப்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 8,
பாசிபருப்பு - 1/4 கப்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிபருப்பை வேகவைத்துக்கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம் தாளித்து முருங்கைகாயை போட்டு வேகவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்த பாசிபருப்பு, அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து வேகவிடவும்.
கொதித்து கூட்டுபோல வந்ததும் கடைசியாக எண்ணெயில் வடகத்தை தாளித்து கொட்டி இறக்கவும்.







0 Response to "முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு"
แสดงความคิดเห็น