ஸ்ரீலங்கன் விமான சேவை மூடப்படமாட்டாதாம்!
எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் மூடப்படமாட்டாதென அந்நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அவர் கூறினார்.
விமான சேவைகள் அமைச்சில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நிசாந்த விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
விமான சேவைகளின் நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் உலகின் சகல விமான சேவைகளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானபோதும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் நிலையான அதன் உறுதிப்பாட்டில் தொடர்ந்து சேவைகளை முன்னெடுத்து வந்தது எனக் கூறினார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கிக்கொண்டிருப்பதால் அதனை மேலும் முன்னேற்றுவதற்கான திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்த அவர்.
கடந்த மாதத்தை விட இந்த மாதம் விமான சேவைகளில் 80 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டன. எனவும் கூறினார்
"அதேபோன்று மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதால் இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நாட்டில் அமைதி நிலவுவதால் விமான சேவைகளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ளன. தேவையேற்பட்டால் வாடகை விமானங்களைச் சேவைக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றும் மனோஜ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.







0 Response to "ஸ்ரீலங்கன் விமான சேவை மூடப்படமாட்டாதாம்!"
แสดงความคิดเห็น