jkr

இந்திய தூதுக்குழு தோட்டங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்ய வேண்டும்


இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினரின் இலங்கைக்கான விஜயம், பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர் தொடர்பில் ஒரு தீர்க்கமான தீர்விற்கு அடித்தளமாக அமையுமென நம்புகிறோம் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,"இலங்கை தமிழர் விடயத்தில் தமிழக மக்கள் மிக கவலையடைந்திருப்பதுடன் இம் மக்களின் மீட்சிக்காக பெரும் பங்களிப்பை நல்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதை நாம் அறிவோம். அந்த நோக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் நேரடி விஜயம் பயன்படும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்று கனிமொழி கூறியிருப்பது எமக்கு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது. இவர்களின் சுயாதீன செயற்பாடு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்ற சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பில் இதுவரை வெளிவராத பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எண்ணுகிறோம்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழுகின்ற மலையக பிரதேசங்களுக்கு இக் குழுவினர் வருகைதரவுள்ளதாக அறிகிறோம்.அவ்வாறு அவர்களின் மலையக விஜயத்தின்போது நேரடியாக தோட்டங்களுக்கு சென்று ஆராய்ந்து அதை உரிமையற்று அடிமைகளாக வாழுகின்ற எமது மக்களின் நிலமையை இந்திய மற்றும்,தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

மொத்தத்தில் வடக்கில் அகதிமுகாம் வாடுகின்ற மக்களின் விரைவான மீள்குடியேற்றத்திற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுத்திட்டத்தை இன உணர்வோடு முன்வைப்பதற்கும். இலங்கை தமிழ்களின் அகதி நிலiமைக்கும் அனாதை நிலமைக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் சந்தர்ப்பமாக இந்திய வாடுகின்ற தூதுக்குழுவின் விஜயத்தை கருதுகின்றோம். " என தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்திய தூதுக்குழு தோட்டங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்ய வேண்டும்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates