மட்டக்களப்பில் இராணுவ வீரர்களின் உதவியுடன் 16 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு

இலங்கை இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ வீரர்களின் உதவியுடன் 16 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.
சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் களுவன்கேனி ,களுவாஞ்சிக்குடி ,வாகரை மற்றும் ஆயித்தியமலை உட்பட 16 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த கால போரச் சூழலின் போது பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கிய வறிய குடும்பங்களுக்கே இவ் வீடுகள் கையளிக்கப்படுகின்றன.அநேகமான வீடுகள் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
23 ஆவது படை அணியின் 234 ஆவது பிரிவின் 17 ஆவது இராணுவ அணி வீரர்களினால் வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலையில் அமைக்கப்பட்டுள்ள வீடு கையளிப்பு வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஜி.பி.பெர்னான்டோ தெரிவு செய்யப்பட்ட குடும்பத்திடம் கையளித்தார்.







0 Response to "மட்டக்களப்பில் இராணுவ வீரர்களின் உதவியுடன் 16 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு"
แสดงความคิดเห็น