jkr

செய்தியறிக்கை

வாசகர்கள் எப்போது பி பி சி தமிழோசையை கேட்கலாம் வாசகர்கள் நன்மை கருதி இந்த ஏற்பாடு
தாக்குதலில் காயமடைந்த ஒருவர்
தாக்குதலில் காயமடைந்த ஒருவர்

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் பலி

தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெரும்பாலும் கிளர்ச்சிக்காரர்கள் எவரும் இல்லாத பிராந்தியம் என்று பாகிஸ்தான் இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வாட் பள்ளத்தாக்கில் தற்கொலைக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

துருப்பினரின் வாகானத் தொடரணி ஒன்று சனநெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றை கடந்து சென்றபோது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் அவற்றின் மீது மோதச் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.


முக்கிய தீவிரவாத தலைவருக்கு எதிரான இரு வழக்குகள் நிராகரிக்கப்பட்டன

ஹாஃபீஸ் முஹமது சாயித்
ஹாஃபீஸ் முஹமதுட் சாயித்
மும்பாய் தாக்குதலின் சூத்திரதாரி என இந்தியாவால் குற்றஞ்சாட்டப்படுகின்ற பாகிஸ்தானிய தீவிரவாத தலைவர் ஒருவருக்கு எதிரான, பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகள் இரண்டை பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற இஸ்லலாமிய குழுவான, லக்ஷர் ஈ தொய்பா என்னும் அமைப்பின் நிறுவனரான, ஹாஃபீஸ் முஹமது சாயித்துக்கு எதிராக, முஸ்லிம்களின் புனிதப் போர் பற்றிய உரைகளை ஆற்றியமை, ஜமாத் அட் டாவா என்னும் தனது தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேகரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

ஆனால், அவரது தொண்டு அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும், ஆகவே அதற்கு நிதி சேகரிப்பது சட்ட விரோதமானது அல்ல என்று அவரது சட்டத்தரணி முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சாயித்துக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை என்று அழுத்தம் கொடுத்து வருகின்ற இந்தியாவுக்கு இந்த முடிவு ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடும்.


அடுத்த 40 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்- ஐ. நா நிறுவனம்

உலக பயிர்ச்செய்கை அதிகரிக்கப்பட வேண்டும்
உலக பயிர்ச்செய்கை அதிகரிக்கப்பட வேண்டும்
உலகின் வளர்ந்து வருகின்ற சனத்தொகைக்கு உணவூட்ட வேண்டுமானால், உலக உணவு உற்பத்தி அடுத்து வரும் 40 வருடங்களில் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு நிறுவனம் கூறியுள்ளது.

மேலதிக நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 40 கோடி மக்கள் பட்டினியை எதிர்நோக்க நேரிடும் என்று உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.

காலநிலை மாற்றமும், நிலங்களில் பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அது கூறுகின்றது.

உணவு விநியோகம் மிகவும் மோசமாக குறைவதை தடுப்பதற்கான முடிவுகள் இப்போதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அது கூறுகின்றது.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

எலினர் ஒஸ்ட்ரோம் மற்றும் ஒலிவர் வில்லியம்ஸ்ஸன்
எலினர் ஒஸ்ட்ரோம் மற்றும் ஒலிவர் வில்லியம்ஸ்ஸன்
பொருளாதார முகாமைத்துவத்தில் ஆற்றிய பணிகளுக்காக எலினர் ஒஸ்ட்ரோம் மற்றும் ஒலிவர் வில்லியம்ஸ்ஸன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு இவ்வருடத்துக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

1968 இல் பொருளாதார நோபல் பரிசு கொண்டுவரப்பட்டதிலிருந்து, இதனைப் பெறுகின்ற முதலாவது பெண், ஒஸ்ட்ரொம் ஆவார்.

காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, விஞ்ஞானத்துக்கான றோயல் ஸ்வீடிஷ் அக்கடமி அவருக்கு இந்த பரிசை வழங்கியுள்ளது.

சந்தைச் செயற்பாடுகளான மூலப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி போன்றவை, ஒற்றை நிறுவனத்தின் உள்ளே மேற்கொள்ளப்படுகின்ற போது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைகின்றன என்பதை புலனாய்வு செய்ததற்காக வில்லியம்ஸ்ஸன் அவர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates