செய்தியரங்கம்
| | |
| இலங்கையில் விரைவில் தேர்தல் |
இலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல்
இலங்கையின் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் அடுத்து வருகின்ற ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக நடத்தப்படும் என்று இலங்கையின் அரசாங்க வானொலி அறிவித்துள்ளது.
வழமையாக நடத்தப்பட வேண்டிய காலத்துக்கு இரு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என்பது, விடுதலைப்புலிகளை தோற்கடித்து 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு தற்போது இருக்கின்ற செல்வாக்கை காண்பிக்கின்றது என்கிறார் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்.
மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தொடர்ச்சியாகக் கிடைத்த 8 வது வெற்றியை அடுத்த மூன்று தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணி அடுத்த ஏப்ரலுக்கு முன்னர் தேர்தல்களை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது.
சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவான வெற்றியைப் பெறுவார் போல் தெரிகிறது.எதிர்க்கட்சி பலவீனமாக இருப்பதால், தான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
அதன் மூலம் அரசியல் யாப்பில் திருத்தத்தை செய்ய முடியும். அதன் மூலம் இரு ஆட்சிக்காலத்துக்கும் அதிகமாக ஜனாதிபதியாக இருப்பதற்கான திருத்தத்தையும் செய்ய முடியும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசியல் மறுசீரமைப்பு திட்டத்தை தேர்தலுக்குப் பின்னரேயே முன்வைக்கப்போவதாக அவர் கூறுகிறார்.
ராஜபக்ஷவும் ஏனைய அரசியல்வாதிகளும், நல்லிணக்கத்துக்கான தேவை குறித்து வழமையாக பேசுவார்கள்.
திங்களன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு உள்ளூராட்சி தலைவர்களுக்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, இடம்பெயர்ந்த தமிழ் மக்களை விரைவில் மீள்குடியமர்த்தப் போவதாக கூறினார்.
ஆனால், நல்லிணக்கம் மற்றும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கக்கூடிய அவரது தீர்வுத்திட்டங்கள் ஆகியவை தொடர்பில் அவர் தெளிவில்லாமல் இருப்பதாக ஜனாதிபதியை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பிலும் இலங்கை நிலை தொடர்பாகவும் ஆஸ்திரேலியப் பிரதமர் கவலை
| | |
| ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது |
ஆஸ்திரேலியாவுக்கு கடல் மூலம் சென்றடைவதற்காக முயற்சிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக இந்தோனேசிய தலைவர்களை தொடர்புகொண்டு தனது கவலையை தெரிவித்ததாக ஆஸ்ரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களுக்கான பொதுவான இடைத்தரிப்பு மையமாக இந்தோனேசியா உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தோனேசியாவின் ஒத்துழைப்பை தான் கோரியதாக ரேடியோ ஆஸ்ரேலியாவில் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற வேளை இந்தோனேசிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கப்பலில் 260 இலங்கையர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து கருத்துக் கூறியுள்ள ஆஸ்ரேலிய பிரதமர். அந்தப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஸ்திரமின்மையே இதற்குக் காரணம் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் அறிவிப்பு
| | |
| நூற்பு ஆலை |
இந்த நிலையில் இந்த அளவுக்கு பணத்தை தம்மால் கட்ட முடியாது என்று கூறி திருப்பூர் சாயப் பட்டறை உரிமையாளர்கள் வரும் 26 ஆம் தேதியில் இருந்து தமது சாயப்பட்டறைகளை மூடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது பற்றி சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலர் கிருஷ்ணன் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.







0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น