jkr

இரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை: அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்


இரானின் அணுத்திட்டம் தொடர்பில், அந்த நாட்டுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது என்று தாமும், ரஷ்யாவும் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அரரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

இரானுக்கு எதிராக மேலதிக தடைகளை கொண்டுவருவது தொடர்பில் ரஷ்யர்களை இணங்கச் செய்வதில், தற்போது மாஸ்கோவில் உள்ள திருமதி. கிளின்டன் அவர்கள் தோல்வியடைந்துவிட்டதாக பிபிசியின் மாஸ்கோவுக்கான செய்தியாளர் கூறுகிறார்.

ஏனைய அனைத்து வழிகளும் பிரயோசனமல்லாது போனால் மாத்திரமே தடை குறித்து ஆராய முடியும் என்று சந்திப்பின் பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை குறைப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்த சமரச பேச்சுக்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு தரப்பும் கூறியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை: அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates