ரஷ்ய பிரதமர் சீனா விஜயம்

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார இணைப்புக்களை பலப்படுத்துவதை இந்த விஜயம் நோக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் பீஜிங்கிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த புட்டினை சீன வெளிநாட்டு அமைச்சர் யாங் ஜியாசி வரவேற்றார்.
தொடர்ந்து சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்த புட்டின், உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார்.
அவர் சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோவை சந்திக்கவுள்ளார். புட்டின் பிரதமராக சீனாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். அவர் ஜனாதிபதியாக இருந்த சமயம் 4 தடவைகள் அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 Response to "ரஷ்ய பிரதமர் சீனா விஜயம்"
แสดงความคิดเห็น