அரியாலை கிழக்கு பகுதி மக்கள் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு ஜ89 ஜ90 ஜ94 மற்றும் ஜ61 வசந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த காலப் போர்ச் சூழலால் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் அரியாலை சாந்தி சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்படி மக்களை மீளக்குடியர்த்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர்களும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் கே.பத்மநாதன் 512வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் மடுகல்ல மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகளும் சமூக சேவையாளர்களும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
இப்பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளைப் புனரமைப்பதற்கென தலா 25ஆயிரம் ரூபாவென நிதியுதவி, ஆறு மாதகால உலர் உணவு மற்றும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச செயலாளர் திரு.செந்தில்நந்தனன் தெரிவித்தார்.
காணி உறுதிப் பத்திரங்களைக் கைவசம் கொண்டிருக்காவிடினும், தாங்கள் முன்பு குடியிருந்த வசிப்பிடங்களில் மீளச் சென்று குடியமர முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காணி உறுதியைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட காணி அதிகாரிகளை அழைத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை அந்த ஜ89 பகுதிகளிலிருந்து ஜ.89 ஜ90 மற்றும் து61 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் எவ்வளவு விரைவாகக் குடியேற விரும்புகிறார்களோ அவ்வளவு விரைவாக மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜ89 ஜ90 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அரியாலை ஜ61 கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜ94 பகுதியிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள அரியாலை கிழக்கு ஜ89 ஜ90 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் அப்பகுதிக் கிராம சேவகர்கள் இடம்பெயர்ந்த மக்களை அழைத்துச் சென்று அவர்களது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்வார்கள் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

0 Response to "அரியாலை கிழக்கு பகுதி மக்கள் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!"
แสดงความคิดเห็น