நடுநிலைமை நாயகன்...
அன்புதனை அணியாய் கொண்டுநீதியினை முடியாய் சூடி
நடுநிலைமை நாயகனாய்
நம்முன்னே வந்தவரே
நன்றிகள் கோடி தந்தோம்
ஏற்றிடுக நம் தலைவா..!
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றுரைத்த வேதமது
இன்று
மௌனமாகிவிட
தவித்தோம் துடித்தோம்
தாயை இழந்து நாம் தனியே
புலம்பி நின்றோம்
தங்கள் தாழ்பணிந்தோம்
தீர்ப்புக்காய் காத்திருந்தோம்..!
நம்பிக்கை வையுங்கள்
நல்லவர் நம் அமைச்சர்
நல்லதொரு முடிவினைத் தந்துமக்கு
உதவிடுவார் - என்று பலர் உரைத்தும்
எம் வயது கேட்கவில்லை.
தந்தையிடம் பிள்ளைகள்
எவ்வாறு நடந்திடுமோ
அவ்வாறே தங்களை
நச்சரித்தோம் - மன்னிப்பீர்
குற்றம் குறை இருந்தால்
பெற்றோர் போல் மறந்திடுக
நித்தம் எம் மனதில்
நீங்கா வசந்தத்தை
சித்தமாய் சிரிக்க வைத்தீர்
பல்லாண்டு வாழ்ந்திடுக..!
வளைய நின்ற செங்கோலை
மீண்டும் நிமிர்த்தியதால்
வையமுள்ள நாள் வரையில்
மங்காது உங்கள் புகழ்...!
- செல்வி சாம்பவி சிவாஜி
க.பொ.த.சாதாரண தர மாணவி
உடுவில் மகளிர் கல்லூரி.







0 Response to "நடுநிலைமை நாயகன்..."
แสดงความคิดเห็น