jkr

காலியில் தாயின் வருகைக்காக காத்திருந்த யுவதியொருவரைக் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது!


தாயின் வருகைக்காக காத்திருந்த யுவதியொருவரைக் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் அவரை அதேயிடத்திற்கு கொண்டு வந்து விட்டுச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலீஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் காலி ஹியாரே பிரதேசவாசியென்றும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட யுவதி 21வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது. காலியிலுள்ள நண்பியொருவரை காண்பதற்காக தனது தாயுடன் காலி நகருக்கு வந்த யுவதி தாய் ரயில் நிலைய கழிவறைக்கு சென்ற நிலையில் அவர் வரும்வரை மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பாக காத்திருந்துள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் ஓட்டிவந்த கெப்ரக வாகனத்தில் தன்னைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் அதன்பின் தான் சுயநினைவை இழந்து விட்டதாகவும் யுவதி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தனக்கு நினைவு திரும்பியபோது தான் கட்டிலொன்றில் கிடந்ததாகவும், சந்தேகநபர் சிறிது நேரத்தின்பின் மீண்டும் வாகனத்தில் ஏற்றி காலி ரயில்வே நிலையத்தின் அருகில் விட்டுச் சென்றதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன், காலி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "காலியில் தாயின் வருகைக்காக காத்திருந்த யுவதியொருவரைக் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates