jkr

திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் பல்வேறு சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளன.


திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் பல்வேறு சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளன.
திருப்பதி கோயிலுக்கு சாதாரண நாள்களில் கூட தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து குவிகின்றனர்.
தினமும் அனைத்து பக்தர்களுக்கும் சாதாரண நாள்களில் கூட 18 மணி நேரத்துக்கு “சர்வ தரிசனம்’ வழங்கப்படுகிறது. இதே போல சிறப்பு தரிசனமும் காணலாம்.
இதுதவிர, தினமும் சுப்ரபாதம், தோமாலா சேவை, அர்ச்சனை, அர்ச்சனானந்த்ரா தரிசனம், கல்யாண உற்சவம், பிரம்மோத்சவம், தோலோத்சவம், வசந்தோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவா, ஏகாந்த சேவா ஆகிய சேவைகளும் உள்ளன. இதற்கான கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக திருப்பதி- திருமலை தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் 19-ம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தரிசன கட்டணங்கள் உயரும்பட்சத்தில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம், தமிழகச் சுற்றுலாத் துறை, இந்திய சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட சுற்றுலா நிறுவனங்கள் தங்களது “திருப்பதி புனித சுற்றுலா’ திட்டங்களுக்கான (பேக்கேஜ்) கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் பல்வேறு சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளன."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates