அமெரிக்க தொழிலதிபரை ரகசியமாக மணந்தார் சாக்ஷி

வேதம், மானஸ்தன், மாப்பிள்ளை கவுண்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அமெரிக்க தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த சாக்ஷி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்த அவருக்கும், அமெரிக்க தொழிலதிபர் பிரம்மா பட் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சாக்ஷி, தனது அமெரிக்கா காதலரை ரகசியமாக திருமணம் செய்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. திருமணத்துக்கு பின்னர் இருவதும் அமெரிக்கா சென்று விட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.







0 Response to "அமெரிக்க தொழிலதிபரை ரகசியமாக மணந்தார் சாக்ஷி"
แสดงความคิดเห็น