ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா) அலுவலகத்திற்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீண்டும வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் டெலோ, புளொட், ஈ. பி. டி. பி., ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று முன்தினம் முதல் எவ்வித முன் அறிவித்தல்களுமின்றி திடீரென பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் வாபஸ் பெறப்பட்டன.
இதன் காரணமாக இவ் அலுவலகங்களுக்கும் குறித்த நபர்களுக்கும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தாம் சேவையாற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு திரும்பினர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து பாதுகாப்பு உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் தலைவருமான இரா. துரைத்தினம் திருகோணமலையிலுள்ள தமது கட்சி அலுவலக்திற்கு நேற்று மாலையும் மட்டக்களப்பிலுளள் அலுவலகத்திற்கு இன்று காலையும் பொலஸார் மீண்டும் பாதுகாப்பு கடமைகளுக்கு திரும்பயுள்ளதாக கூறினார்.
தமது கட்சியைச் சேர்ந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அவர் குறிப்பிட்டார்.







0 Response to "ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா) அலுவலகத்திற்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!"
แสดงความคิดเห็น