jkr

தொழிலாளர் சம்பள விடயத்தில் புதிய நடைமுறையே தேவை : இ.தொ.ஐ.மு.


தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஊதிய நடைமுறையை உருவாக்கக் கோரும் சாத்வீக போராட்டங்களை நடத்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

"கூட்டு ஒப்பந்தத்திற்கு பின்பு தோட்டத் தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட முதல் சம்பளத்தில் பல்வேறு வகையிலான சம்பள குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 75% வருகை கொடுப்பனவு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு எட்டாக்கனியாகியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வேலை இலக்கை முடித்தால் வழங்கப்படும் என்ற 30 ரூபா சம்பளத்தை ஏட்டில் உயர்த்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட தொகை இது என்பது வெளிப்படையாகியுள்ளது.

இதனால் தொழிலாளர்களுக்குப் பாதகமான முறையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உடைத்தெறியப்பாட வேண்டும்.

இதற்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி முன்நின்று செயற்படவுள்ளது" என்று கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தொழிலாளர் சம்பள விடயத்தில் புதிய நடைமுறையே தேவை : இ.தொ.ஐ.மு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates