ததேகூ உறுப்பினர் தங்கேஸ்வரியும் மட்டக்களப்புக்கு வருகை

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், த.கனகசபை ஆகியோர் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு திரும்பிய நிலையில் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமர் நேற்று மாலை மட்டக்களப்பு திரும்பியுள்ளார்.
தற்போது லண்டனில் தங்கயிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தற்போது உடனடியாக நாடு திரும்ப மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமையை பார்வையிட்டு வருவதோடு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றார்.
வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகங்களுக்கும், அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் இவர் கடந்த 3 நாட்களில் விஜயங்களை மேற்கொண்டிருந்தார்







0 Response to "ததேகூ உறுப்பினர் தங்கேஸ்வரியும் மட்டக்களப்புக்கு வருகை"
แสดงความคิดเห็น