jkr

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சு திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வாகரை மற்றும் வவுணதீவு பிரதேசத்தில் 35 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று வழங்கினார்.

கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட குடும்பப் பெண்களுக்குத் தையல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை முடித்துக் கொண்டவர்களுக்கே தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான வைபவம் வாகரைப் பிரதேசத்திலும், வவுணதீவு பிரதேச மணிபுரத்திலும் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

"எவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெற்றாலும் தனிநபர் வருமானம் அதிகரிக்கப்பட்டால் தான் சமூக பொருளாதாரத்திலும் எதிர்பார்க்கும் இலக்குககளை எட்ட முடியும்.

குடும்பங்களைப் பொறுத்த வரை பெண்களின் பங்கு, வாழ்வாதாரத்துடன் மிக நெருக்கமான தொடர்புடையது" என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates