jkr

யாழ். கோப்பாய் நலன்புரி நிலையத்திற்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் குழுவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் விஜயம்!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை வளாகத்திலுள்ள நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களை சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இன்று பிற்பகல் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை வளாகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோருடன் சென்றிருந்த சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் ஜோ தலைமையிலான குழுவினர் அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துக் கூறியதுடன் தம்மைக் கூடிய விரைவில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.

அவர்களது கோரிக்கைகளைச் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததுடன் அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கிக் கூறியமையைத் தொடர்ந்து சிங்கப்ப+ர் அரசாங்கத்தின் மூலம் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை வளாகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஆளுநர் சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் யாழ்.அரசாங்க அதிபர் யாழ்.மாநகர முதல்வர் உட்படப் பல்வேறு அரச உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். கோப்பாய் நலன்புரி நிலையத்திற்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் குழுவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் விஜயம்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates