jkr

கணேஷ், ஆர்த்தி கல்யாணம் - குருவாயூரில் முடிந்தது - இன்று சென்னையில் வரவேற்பு


நகைச்சுவை கலைஞர்கள் ஆர்த்தி, கணேஷ் திருமணம் குருவாயூரில் சிறப்பாக நடந்தது. இன்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரங்கள் கணேஷ், ஆர்த்தி. அதன் பின்னர் பல்வேறு படங்களில் இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

அதன் பின்னர் டிவியில் புகுந்த இருவரும் அதன் மூலம் பிரபலமாகினர். டிவியில் நடித்தபோது கணேஷுக்கும், ஆர்த்திக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க தற்போது இந்தக் காதல் கல்யாணமாகியுள்ளது.

குருவாயூர் கோவிலில் ஆர்த்தி, கணேஷ் திருமணம் நேற்று நடந்தது. நேற்று நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு கல்யாணம் நடந்தது. இந்த ஜோடிகள் அனைவரும் ஆர்த்தி - கணேஷ் ஜோடிக்கும் வாழ்த்து தெரிவித்தது வித்தியாசமாக இருந்தது. ஏராளமான ரசிகர்களும் ஆர்த்தி- கணேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கக் குவிந்திருந்தனர்.

இன்று ஆர்த்தி - கணேஷ் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் மாலையில் நடைபெறுகிறது. இதில் திரையுலகினர், சின்னத் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கணேஷ், ஆர்த்தி கல்யாணம் - குருவாயூரில் முடிந்தது - இன்று சென்னையில் வரவேற்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates