jkr

ராக்கி மீது 'காதலர்' வழக்கு!


தனது உணர்வுகளை ராக்கி சாவ்ந்த் காயப்படுத்தி விட்டார், தன்னை மோசடி செய்து விட்டார் என்று கூறி நடிகை ராக்கி சாவந்த் மீது ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அந்த நபரின் பெயர் ஜதீன் சர்மா. 24 வயதான இவர் ராக்கி சாவந்த் பங்கேற்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றவர்.

இவர் அமிர்தசரஸ் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராக்கி சாவந்த் மீது நான் உயிரையே வைத்திருந்தேன். அவரை அமிர்தரஸ் நகருக்கு வருமாறு கோரியிருந்தேன். அவரும் வருவதாக கூறியிருந்தார். இதை நம்பி 2 முறை ரூ. 5 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால் அவர் வரவே இல்லை.

நான் அவர் மீது வைத்திருந்த உண்மையான காதலை கேலிக்கூத்தாக்கி விட்டார் ராக்கி. எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டார்.

ராக்கியை அடைவதற்காக நான் அவர் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் கூட பங்கேற்றேன். அவரது பெயரை நான் மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளேன்.

இதையெல்லாம் அறிந்த பின்னர்தான் சுயம்வரம் நிகழ்ச்சியில் என்னை பங்கேற்குமாறு ராக்கியே அழைத்தார்.

தற்போது அவர் ஏமாற்றி விட்டார். அவருக்காக நான் செலவு செய்த ரூ. 5 லட்சம் பணத்தை தர அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் சர்மா.

Tags: rakhi sawant, lover, case, sentiments, hurt, ராக்கி சாவந்த், காதலர், வழக்கு, உணர்வுகள், காயம், சுயம்வரம்..
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ராக்கி மீது 'காதலர்' வழக்கு!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates