தொழிலாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்க சில சக்திகள் சதித் திட்டம்: ஜனாதிபதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்க சில சக்திகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மலையக எழுச்சி என்ற திட்டத்தின் கீழ் மலையக மக்களின் கனவுகள் மெய்ப்பிக்கப்படக் கூடிய காலம் தொலைவில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக தோல்வியைத் தழுவுவோம் என்ற பீதி காரணமாக சிலர் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லயன் அறை வாழ்க்கையை இல்லாதொழித்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மலையக தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
0 Response to "தொழிலாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்க சில சக்திகள் சதித் திட்டம்: ஜனாதிபதி"
แสดงความคิดเห็น