jkr

யாழ். ஆயரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ்.மறைமாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்திரநாயம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு இன்று முற்பகல் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் ஆயருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது யாழ்.குடா நாட்டு மக்களின் வசதி கருதி ஏ-9 தரைவழிப் பாதை சுதந்திரமான போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்த யாழ்.மறைமாவட்ட ஆயர் நாட்டில் தற்போது அரசியல் தீர்வு உடனடியாக காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குடாநாட்டில் தற்போது காணப்படும் சில வீதித் தடைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றை அகற்றி மக்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் மேலும் யாழ் கன்னியர் மடம் மகளிர் கல்லூரியை தேசிய கல்லூரியாக உயர்த்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவிரைவில் அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு குடாநாட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வு உறுதிப்படுத்தப்படும் எனத் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.










  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். ஆயரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates