இந்திய அரசின் அழுத்தங்களின் மத்தியிலும் போரைத் தொடர்ந்தவர் ஜனாதிபதி : லலித் வீரதுங்க
இறுதி கட்ட மோதலின்போது உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தது. எனினும் அதற்கு அடிபணியாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே யுத்தத்தை தொடர்ந்தார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, இராணுவத்தின் 22 ஆவது படையணியினரின் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பிற்பகுதியில் வடக்கில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. அதன்போது யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தது. எனினும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என இந்திய அரசாங்கத்துக்கு அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார் என லலித் வீரதுங்க குறிப்பிட்டதாக திருகோணமலையிலுள்ள எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
0 Response to "இந்திய அரசின் அழுத்தங்களின் மத்தியிலும் போரைத் தொடர்ந்தவர் ஜனாதிபதி : லலித் வீரதுங்க"
แสดงความคิดเห็น