இராணுவ இரகசியங்கள் புலிகளின் வலையமைப்பிற்கு கிடைக்கப் பெற்றமை தொடர்பில் விசாரணை
இராணுவ இரகசியங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மிகவும் இரகசியமாக பேணப்பட்ட விசேட இராணுவப் பிரிவுகள் தொடர்பான தகவல்கள் புலிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொல்ப், ரோமியோ, ஏகே மற்றும் டெல்டா ஆகிய நான்கு விசேட இராணுவப் பிரிவுகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக புலனாய்வுத் தகவல்களை ஆதாரம் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த இரகசியங்களை வெளியிட்ட தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த விசேடப் பிரிவுகள் தொடர்பிலான தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Response to "இராணுவ இரகசியங்கள் புலிகளின் வலையமைப்பிற்கு கிடைக்கப் பெற்றமை தொடர்பில் விசாரணை"
แสดงความคิดเห็น