அபகீர்த்தியை ஏற்படுத்தும் பரப்புரைகளை வெளியிடக் கூடாது � தமிழ் கூட்டமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது இந்திய மத்திய அரசிற்கும் தமிழக மாநில அரசிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பிண்ணனியில் இந்தியா செயற்பட்டுள்ளதாகவோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க இந்தியா தவறியுள்ளதாகவோ பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய போது இந்த உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக இணையத்தளமொன்றிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனிடையே புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலவைர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கட்சித் தலைமை எடுத்தமைக்காக உள் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் சொல்வதை மட்டும் வேத வாக்காக ஏற்றுக் கொண்டு செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தாம் புலிகளால் மேலாண்;மை செலுத்தப்படுவதற்கு எதிராக தமக்குள் குறைந்தபட்ச இணக்கப்பாட்டையேனும் மேற்கொள்ள முடியாத நிலையில் அப்போது இருந்து வந்தனர்.
தற்சமயம், வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லாத நிலையில் அக முரண்பாடுகள் கூட்டமைப்பிற்குள் தலைதூக்கியுள்ளன.
0 Response to "அபகீர்த்தியை ஏற்படுத்தும் பரப்புரைகளை வெளியிடக் கூடாது � தமிழ் கூட்டமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை"
แสดงความคิดเห็น