சுவரொட்டிகளை அகற்றியதாகப் பொய்கூறிய பொலிஸார்மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க!
தேர்தல்கள் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் பதாகைகளையும் அகற்றியதாகப் பொய்கூறிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளர் பணித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களது பதாகைகளும் சுவரொட்டிகளும் அகற்றப்படவில்லை என தேர்தல் செயலகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனைக் கண்காணிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
அதன் பின்னர் சுவரொட்டிகள், பதாகைகளை அகற்ற அனைத்து பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
எனினும், இதுவரை குறிப்பிட்ட சில பகுதிகளில் பதாகைகள் அகற்றப்படாமல் இருப்பதாக சம்பந்தப்பட்ட தேர்தல் அத்தியட்சகர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதைத் தொடர்ந்து பொலிஸ் திணைக்களத்துக்கு பொய்கூறிய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பணித்துள்ளார்.
0 Response to "சுவரொட்டிகளை அகற்றியதாகப் பொய்கூறிய பொலிஸார்மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க!"
แสดงความคิดเห็น