jkr

அல்-கொய்தாவுடன் தொடர்பு : பிரான்ஸ் அணு விஞ்ஞானி கைது


'பிளெக்ஹோல்' குறித்த மிக முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஒருவர் அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்ததையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்ஜீரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்சைச் சேர்ந்த டாக்டர் அடலீன் ஹெசெர் (32) என்ற அந்த விஞ்ஞானி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள செர்ன் அமைப்பி்ன் Large Hadron Collider என்ற அணுப் பிளவு ஆராய்ச்சி மையத்தில் பிளெக்ஹோல்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்.

லண்டனில் ருத்தர்போர்ட் ஆப்பிள்டன் லேப் என்ற அரசின் மிக ரகசியமான அணு ஆராய்ச்சி மையத்திலும் பணியாற்றியவர் இவர்.

இவர் அல்-கொய்தாவின் வட ஆபிரிக்கப் பிரிவுடன் மெயில்கள் மூலம் தொடர்பில் இருந்ததை பிரான்ஸ் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

மேற்கத்திய நாடுகளைத் தாக்குவது, குறிப்பாக பிரிட்டனைத் தாக்குவது தொடர்பான அல்-கொய்தாவின் திட்டங்களுக்கு இவர் பல தகவல்களைத் தந்து வந்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணு ஆராய்ச்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவர் அல்-கொய்தாவுடன் இணைந்து திட்டமிட்டு வந்துள்ளார்.

இவரது செயல்களை ரகசியமாக கண்காணித்து வந்த பிரான்ஸ் மற்றும் இஙகிலாந்தின் உளவுப் பிரிவினர் போதிய ஆதாரங்கள் சிக்கியதையடுத்து இவரைக் கைது செய்தனர். தனது குற்றங்களை இவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடன் கைது செய்யப்பட்ட இவரது தம்பி டாக்டர் ஹலீம் விடுவிக்கப்பட்டுவிட்டார்.

அடலீன் ஹெசெரின் இ-மெயில்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்காணித்து, அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உளவுப் பிரிவினருக்குத் தகவல் தந்துள்ளனர்.

இதையடுத்து அவரை இந்நாடுகளின் உளவுப் பிரிவினர் கண்காணி்த்து வந்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அல்-கொய்தாவுடன் தொடர்பு : பிரான்ஸ் அணு விஞ்ஞானி கைது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates