jkr

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகள் இப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன!


ஏற்கெனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் அதன் தொடர்ச்சியாக இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் தலைவருமான கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுடனும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பல்வேறு அனுமதிகளும் இணக்கப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று (06.01.2010) இரவு முதல் யாழ்ப்பாணத்திற்கும் தெற்குவிற்குமான ஏ-9 பாதை முற்று முழுதாக மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களோடு காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் 24 மணி நேரமும் மக்கள் தாம் விரும்பிய வகையில் பயணம் செய்ய முடியுமென ஈ.பி.டி.பி. தெரிவித்துக் கொள்கின்றது. பாதுகாப்பு அனுமதி மற்றும் பாதுகாப்பு வாகனத் தொடரணி ஆகியவை இனி ஏ-9 பாதையில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு தேவையற்றதாகின்றது என்பதை ஈ.பி.டி.பி. மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றது.

நாம் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதும் எமது மக்கள் நலன்சார்ந்த 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருப்பதும் மக்கள் அறிந்ததே! எமது கோரிக்கைகள் தொடர்பில் பல்வேறு விதமான கேள்விகளையும் விமர்சனங்களையும் தென்பகுதியிலுள்ள பேரினவாத குழுக்கள் முன்வைத்து வருகின்றன. ஆனாலும் ஜனாதிபதி அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொண்டிருக்கும் இணக்கப்பாடும் நம்பிக்கையும் எந்த வகையிலும் எவராலும் சிதைக்கப்படக் கூடியது அல்ல என்பதை நாளாந்தம் நாம் பெற்று வரும் வெற்றிகள் காட்டி நிற்கின்றன. அந்த வகையில் எமது 10 அம்ச கோரிக்கைகளில் உள்ள பல்வேறு விடயங்களில் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனித்துவமான அக்கறை கொண்டிருக்கின்றார். அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆகவே ஈ.பி.டி.பி.யினராகிய எமக்கு தமிழ் மக்களின் சார்பாக ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கும் 10 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கையுண்டு. எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களால் பயன்மிக்க எதையும் செய்ய முடியாது. அவர்கள் வானளவிற்கு வாக்குறுதிகளை வழங்கலாம். அவற்றால் நன்மையேதும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

எனினும் எமது முயற்சியின் பலனாக இன்றும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.
அவையாவன தெல்லிப்பளை பகுதியில் இதுவரை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அங்கு வாழ்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் எமது கோரிக்கைகள் ஜனாதிபதி அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 509 குடும்பங்களைச் சேர்ந்த 1862 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் உதவிப் பணம் வழங்குவதற்கு கௌரவ பசில் ராஜபக்~ அவர்கள் இணக்கம் தெரிவித்ததோடு முதற்கட்டமாக இன்று 5,000 ரூபா ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது இதே வேளை அந்த மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இருக்கும் பலாலி வலிகாமம் வடக்கு வடமராட்சி கிழக்கு அரியாலை தென்மராட்சி கொழும்புத்துறை ஆகிய பகுதிகளிலும் 75 வீதமான பகுதிகளில் அப்பகுதி மக்களை உடனடியாக மீளக்குடியேறுவதற்கு அனுமதிப்பதென இணக்கம் காணப்பட்டுள்ளது. அதைவிடவும் யுத்த காலத்தில் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்~ கூறுகையில் எதிர்வரும் 9ம் திகதி சரணடைந்த 1000 இளைஞர், யுவதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும் ஏனையவர்களையும் விரைவாக கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களையும் விரைவாக விடுதலை செய்வதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் உறுதியளித்தார்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளவும் உறவினர்களுக்கு நியாயங்களை கிடைக்கச் செய்யவும் விசாரணை கமிசன் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார். இவை தவிரவும் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப்போர் இதுவரையில் முகங்கொடுத்த நெருக்கடிகள் முற்றாகத் தளர்த்பட்டுள்ளன. அந்த வகையில் 24 மணிநேரமும் எந்த பகுதியிலும் மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியுமென்ற இணக்கப்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தெரிவித்துள்ளார்.

இவை தவிரவும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த மீள்குடியேற்றம் அரச கட்டமைப்புகள் மற்றும் சுமுக வாழ்க்கையை ஏற்படுத்துதல் தொடர்பான கோரிக்கைகளும் விரைவாக ஆராயப்பட்டதோடு அவர்களின் கோரிக்கைகளை விரிவாக நடைமுறைக்கு கொண்டு வரவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களுடைய கோரிக்கைகளும் ஆராயப்பட்டு உடனடித் தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகள் இப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates