இறுதிப்போரில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் பலி; 36 ஆயிரம் வீரர்கள் அங்கவீனர்களாயினர்: சரத் பொன்சேகா
இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
0 Response to "இறுதிப்போரில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் பலி; 36 ஆயிரம் வீரர்கள் அங்கவீனர்களாயினர்: சரத் பொன்சேகா"
แสดงความคิดเห็น