ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: அமெரிக்கத் தூதுவர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான வன்முறைகளின் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் இவ்வறிக்கையினை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இரு அறிக்கைகளை அமெரிக்கத் தூதரகம் விடுத்திருந்தது. அவை பெரும்பாலும் சுதந்திரமானதும், நீதியானதும் வன்முறைகள் அற்ற தேர்தல் ஒன்றினை வலியுறுத்தும் முகமாகவே அமைத்திருந்தன.
இவ் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா நடுநிலையாகவே உள்ளது. எந்த வேட்பாளர் வென்றாலும் கவலையில்லை. அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும். அதாவது முதன்முறையாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் மக்கள் தமது ஜனாநாயக உரிமை மூலம் இந்நாட்டை தலைமை தாங்குவதற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
எந்த்வொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இறுதி முடிவுகளை விட ஜனநாயக ரீதியான முறையில் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதே நோக்கம். எமது அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் நடுநிலையாகவே அமைந்துள்ளன.
தேர்தல் தினத்துக்கான கடைசி வாரத்தை எட்டியுள்ள சமயம், எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையர்கள் அனைவரும் எவ்வித இடையூறும் இன்றி, வன்முறைகள் இன்றி சுதந்திரமாக வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 Response to "ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: அமெரிக்கத் தூதுவர்"
แสดงความคิดเห็น