jkr

சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டியவர் வாரியபொலவில் கொலை


வாரியபொலவில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளார்.இவர் நேற்று இரவு வாரியபொலவில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொடிகளை ஒட்டிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வாரியபொலவைச் சேர்ந்த தம்மிக ஹேரத் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரான வன்முறைகளில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிவரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் போது வாக்களார்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், வாக்கு மோசடிகள் மேற்கொள்ளவும் ஆளுங்கட்சியினர் தமது ஆதரவாளர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாக சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்களர்கள் தமது பிரதேசங்களில் உள்ள இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார்களை அணுகி சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற உதவுமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக வாக்களர்கள் தமது பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்தும், வாக்குத் திருட்டுகள் குறித்தும் ஊடகங்களுடன் தொடர்புகொள்ளுமாறும், கையடக்க தொலைபேசிகள் ஊடக அவற்றைக் காட்சிப்படுதுவதுடன் புகைப்படங்கள் எடுக்குமாறும் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் வாக்காளர்களைக் கோரியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டியவர் வாரியபொலவில் கொலை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates