jkr

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 745 பேர் விடுதலை



சிறீலங்காப் படையினரால் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 745 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பிரிந்திருந்த அவர்களின் குடுங்பங்களுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட போது விசாரணை என்ற பெயரில் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளையும், கணவன், மனைவி, எனத் தனித்தனியே பிரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிரிக்கப்பட்டவர்களில் 745 பேர் மீண்டும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு சிறப்பு முகாங்களில் இருந்து அவர்கள் மீண்டும் மக்கள் தங்கியிருக்கும் வவுனியா தடுத்து முகாங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இது சிறீலங்கா அரசாங்களின் தேர்தல் மற்றும் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கை என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 745 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெற்றோர்களிடம் இன்றையதினம் ஒப்படைத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிற்கு விஜயம் செய்த சமயம் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் புனர்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் அவர்களிற்கான சுயதொழிலை வழங்கும் பொருட்டும் 745 பேரை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற ஏனையவர்கள் கட்டம் கட்டமாகப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாகவும் படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11 ஆயிரத்து 544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மற்றும் பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு முகாம்களில் பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் உள்ளதாகவும் இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்கள் மருத்துவர்கள் போன்றோருக்குத் தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 745 பேர் விடுதலை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates