மன்னாரில் 85,322 பேர் வாக்களிக்கத் தகுதி : தேர்தல் திணைக்களம்
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது 85,322 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் போது 14,925 வாக்காளர்கள் இடம் பெயர்ந்து புத்தளம், கொழும்பு, களுத்துரை மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி வாக்காளர்களில் 679 வாக்காளர்கள் மரணமடைந்திருப்பதாகவும் 2,222 வாக்காளர்கள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டு இம்மாவட்டத்திலேயே இடம் பெயர்ந்துள்ள 679 பேர், குறித்த பிரதேசங்களில் வாக்களிக்க தேர்தல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 68 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றைவிட இரண்டு வாக்களிப்பு நிலையங்கள் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் நலனுக்காக மன்/அல் அஸ்கார் மகா வித்தியாலயத்திலும் நானாட்டான் பாடசாலையிலும் அமைக்கப்படவுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளில் 28 வாக்களிப்பு நிலையங்களும் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் தேர்தலில் அமைக்கப்பட உள்ளன என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "மன்னாரில் 85,322 பேர் வாக்களிக்கத் தகுதி : தேர்தல் திணைக்களம்"
แสดงความคิดเห็น