வவுனியா பாரதிபுரம் ஈஸ்வரிபுரம் ஆகிய கிராம மாதர் சங்கங்களின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!
வவுனியா பாரதிபுரம் ஈஸ்வரிபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது கிராமங்களின் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர். வவுனியாவிலுள்ள சுவர்க்கா ஹொட்டலின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாரதிபுரம் ஈஸ்வரிபுரம் ஆகிய இரு கிராமங்களுக்கு மின்சாரம் வைத்தியசாலைகள் இல்லை என்றும் இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவித்த மாதர் சங்கப் பிரதிநிதிகள் குறைந்தபட்சம் நோயாளர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் வசதி செய்து தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இரு கிராமங்களிலுள்ள கிணறுகள் அசுத்தமாக இருப்பதனால் அவற்றிலுள்ள தண்ணீரை பாவனைக்கு எடுத்துக்கொள்ள முடியாதிருப்பதாகவும் இரு கிராமங்களிலுள்ள கிணறுகளை சுத்திகரிப்பதுடன் புதிய கிணறுகளை அமைத்துத் தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த இரு மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள்; தமது கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இக்கிராமங்களில் வறிய மக்கள் வசித்து வருவதால் அவர்களது பிள்ளைகளின் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளதாகவும் அம்மாணவர்களுக்கு புத்தகம் கொப்பி போன்ற கல்வி உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். வவுனியா பாரதிபுரம் ஈஸ்வரிபுரம் ஆகிய கிராமங்களின் இரு மாதர் சங்கப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட தேவைகள் குறைபாடுகள் அனைத்தையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கிராமங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாதர் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததுடன் இரு கிராமங்களின் தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். |
0 Response to "வவுனியா பாரதிபுரம் ஈஸ்வரிபுரம் ஆகிய கிராம மாதர் சங்கங்களின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!"
แสดงความคิดเห็น