கடந்த காலத்தில் தமிழ்த்தலைவர்கள் மிகையான கோரிக்கைகளை முன்வைத்ததன் மூலம் கைகெட்டியதும் கிடைக்காமல் போனது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வாய்வீரம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்தபோது வெளிநாடுகளில் சென்று சுகபோக வாழ்வை மேற்கொண்டதை தமிழ்பேசும் மக்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சமாசப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்தார். வவுனியாவிலுள்ள சுவர்க்கா ஹேட்டலின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது கடற்தொழிலாளர் சங்க சமாசப் பிரதிநிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர். அச்சயம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலத்தில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் தமது கன்னிப்பேச்சை நிகழ்த்தும் போது 40 ஆயிரம் சவப்பெட்டிகளில் யாழ்.குடாநாட்டிலுள்ள இராணுவத்தினரை கொழும்புக்கு அனுப்பப்போவதாக வாய்ச்சவடால் விட்டது போன்ற நடவடிக்கைகளை நினைவுகூர்ந்ததுடன் இத்தகைய தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கைகளால் வன்னி மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களும் புலித்தலைமையும் மேற்கொண்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளில் மிகையான கோரிக்கைகளை முன்வைத்ததன் மூலம் கைகெட்டியதும் கிடைக்காமல் போனதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் தாம் ஒருபோதும் மக்களைவிட்டு ஓடிப்போகப்போவதில்லை என்றும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக நடைமுறைசாத்தியமான வழிகளில் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார். தற்போது எதிரணியினர் ஈ.பி.டி.பி.க்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக பிரச்சாரம் செய்துவருவதாகவும் உண்மையில் எமது கட்சி அரசிடம் வெளிப்படையாக பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே ஆதரவு வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். |
0 Response to "கடந்த காலத்தில் தமிழ்த்தலைவர்கள் மிகையான கோரிக்கைகளை முன்வைத்ததன் மூலம் கைகெட்டியதும் கிடைக்காமல் போனது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น