jkr

ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற கருத்தரங்கு நிறைவாக முடிவுற்றது..


தோழர் சுந்தரம் அவர்கள், தனக்கென்று ஓர் முகவரி தேடாதவராவார். விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் 28வது நினைவு தினத்தினை முன்னிட்டு. கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள். ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த கருத்தரங்கத்தில் கழகத்தோழர் அமரர் மீரான் மாஸ்டர் (சுப்பிரமணியம் சத்தியராஜன்) இன் தாயாரும் இடதுசாரியவாதி, பொதுவுடமைவாதி அமரர் கே.எ.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாருமான திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கவிதை வாசிக்கப்பட்டு தோழர் சுந்தரத்தினானுட வாழ்க்கை நினைவு கூறப்பட்டது. ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற கருத்தரங்கு நிறைவாக முடிவுற்றது.

வாசிக்கப்பட்ட கவிதை:
“சுந்தரமே! எங்கேநீ?….சுதந்திர உலகிற்குத்
தந்திரமாய் அனுப்பினரோ?…..தாளமுடியு தில்லை.
எந்திரம் போலநீ எத்தனை செயல் புரிந்தாய்
உன்தரத்தை அறியாதார் உலகில் இருந்தென்ன?
அந்தரத்தில் எம்மைநீ அநாதையாய் விட்டாயோ?
ப சுந்தரம் பெற்றெடுத்த பாசம்மிகு புதல்வா!……………..

தோழர்- சுந்தரம் அவர்கள் தோழர்- மணியம் அவர்களுடன் உரையாடும் போது என்காதில் விழுந்த சில செய்திகளின் துளிகள்….
தந்தையார்-சுளிபுரம், தாயார் காரைநகர்.
நாட்டுவைத்தியமும், நாடக இயக்குனருமான…. அண்ணாவியார்
பரம்பரை (விக்காவில், ஆயிலி..காரைநகர்) பெரியம்மா….மூளாய்.
தொடர்ச்சி:–
என்குழந்தைகளால் கையெழுத்துப் பிரதியாகச்
“ சிறுபொறி” வந்தது 1976ல்
“புதியபாதை” 1980ல் வெளிவந்து ….
சிறிதுநாள் தாமதித்து 1981ல் தொடர்ந்து வந்தது.
தோழர் சுந்தரத்தின் குணாதிசயங்கள்:—-
பெரியோருக்குக் கீழ்ப்படிவு, குருபக்தி,
நன்றிமற்வாமை, குழந்தைகளிற் பாசம்,
சகலமொழிகளையும் படிக்க ஆவல்,
தன்னடக்கம், ஊக்கம், நட்புக்கு முன்னுரிமை…
ஆண்டுகள் 27 கழிந்தும் அவரை நினைவுகூரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ந்ன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும் ………அம்மா.
(தொகுப்பு.. அலெக்ஸ் இரவி!)
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற கருத்தரங்கு நிறைவாக முடிவுற்றது.."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates