மக்களின் இதயத் துடிப்பை நன்கறிந்தவன் நான் : கெம்பல் பார்க் கூட்டத்தில் ஜனாதிபதி
ஒருபோதும் தன்னால் முடியாதது ஒன்றையும் தான் கூறியதில்லை என்றும் ஏழை மக்களின் இதயத் துடிப்பை தான் நன்றாக அறிந்து நாட்டின் முன்னேற்றத்துக்காகவே எப்போதும் சிந்தித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 90 முதல் 94 வீதம் வரை நான் நிறைவேற்றியுள்ளேன். இந்தத் தடவை 100 வீதம் வரை முடிப்பேன். என்னால் முடியாததை நான் ஒருபோதும் மேடைகளில் கூறியதில்லை" என்றார்.
பிரதி மேயரும் முன்னாள் ஐ.தே.க. செயற்குழு உறுப்பினருமான அசாத் சாலியும் இக்கூட்டத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "மக்களின் இதயத் துடிப்பை நன்கறிந்தவன் நான் : கெம்பல் பார்க் கூட்டத்தில் ஜனாதிபதி"
แสดงความคิดเห็น