ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த ஜனாதிபதி வேட்பாளர்களிடம் அறிக்கை
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்காக ஊடக அமைப்புக்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இன்று இதழியல் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
தமது புனரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தெளிவான வாக்குறுதியை எதிர்பார்த்து ஊடக அமைப்புக்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த புனரமைப்பு வேலைத்திட்டத்தை முன்வைக்கவுள்ளன.
அதன் விவரம் வருமாறு :
"ஜனநாயக சமூகத்திற்குத் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் சுதந்திரம் மற்றும் வெளியீட்டு சுதந்திரம் மிக முக்கியமானவை. சமூகத்தின் மேம்பாட்டுக்கும் நலன்புரி நடவடிக்கைக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய மனித உரிமைகளை அனுபவிக்கவும் இவை அத்தியவசியமாகத் தேவைப்படுகின்றன.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் அரசியல் ரீதியான அறிவைப் பொறுவதற்கும் ஜனநாயக சமூக நடவடிக்கைகளில் பூரணமாக பங்களிப்பு செய்வதற்கும் சகல குடிமக்களும் தகவல்களைப் பெற்றுக்கொள்வத்ற்கான வழி முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் அரச இரகசிய சட்ட மூலம், பத்திரிகை, பத்திரிகை சபை சட்ட மூலம் பயங்கரவாத சட்ட மூலம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் போன்றவற்றால் ஊடக சுதந்திரமும் வெளியீட்டு சுதந்திரமும் அநீதியான முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அரச ஊடக நிறுவனங்கள் (அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டும்) அரசின் நிர்வாகத்தின் கீழ், அதன் நடவடிக்கைகளுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
மேற்படி பெறுமதியை ஏற்றுக்கொள்வது மற்றும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஊடகங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ நிர்வாகக் கட்டமைப்பைச் சிறந்த முறையில் ஆராய்ந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
தேசிய பாதுகாப்புக்கு உகந்த வகையில் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் சுதந்திரம் மற்றும் வெளீயீட்டுச் சுதந்திரம் குறித்து விதிக்கப்பட்டுள்ள தடைகளின் எல்லைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்."
இவை போன்ற மேலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாக மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
0 Response to "ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த ஜனாதிபதி வேட்பாளர்களிடம் அறிக்கை"
แสดงความคิดเห็น