வங்கதேசத்தில் சாதிக்குமா இந்தியா? : நாளை முத்தரப்பு தொடர் ஆரம்பம்
முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் நேற்று வங்கதேசம் சென்றனர். கடந்த ஆண்டு உள்ளூரில் அசத்திய தோனி தலைமையிலான இந்திய அணி, இம்முறை அன்னிய மண்ணில் சாதிக்க காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நாளை துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு தாகா சென்றனர். நாளை நடக்கும் முதல் போட்டியில் வங்கதேசம், இலங்கை மோதுகின்றன. 5ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா அணி, இலங்கையை சந்திக்கிறது. பைனல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இத்தொடர் முடிந்த பின் இந்தியா, வங்கதேச அணிகள் சிட்டகாங்(ஜன., 17-21), தாகாவில்(ஜன., 24-28) நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
இலங்கை பரிதாபம்
இலங்கை அணியை பொறுத்தவரை ஜெயசூர்யா, முரளிதரன், ஜெயவர்தனா, மலிங்கா, பெர்னாண்டோ, மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் கேப்டன் சங்ககரா, தில்ஷன் மீதான சுமை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்க முயற்சிக்கலாம்.
வங்கதேசம் எழுச்சி
சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் வங்கதேசம் எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 73 சதவீத வெற்றி பெற்று அசத்தியுள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மொர்டசா இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் சாகிப் அல் ஹசன் உள்ளார்.
0 Response to "வங்கதேசத்தில் சாதிக்குமா இந்தியா? : நாளை முத்தரப்பு தொடர் ஆரம்பம்"
แสดงความคิดเห็น