jkr

துப்பாக்கிப் பிரயோகத்தில் மு.கா. ஆதரவாளர் காயம் :-அக்கரைப்பற்றில் சம்பவம்


அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான முகம்மது சூர்த்தீன் றிபாஸ் (19 வயது) என்பவரே காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இடது கால் தொடைப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரது அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இளைஞரே வீட்டில் முன் வீதியில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்ததுடன் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு கைக்குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைக்குண்டு தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆதம் லெப்பை உபைத் என்ற தேசிய காங்கிரஸ் ஆதரவாளர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு போகும் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போதே துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "துப்பாக்கிப் பிரயோகத்தில் மு.கா. ஆதரவாளர் காயம் :-அக்கரைப்பற்றில் சம்பவம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates