காங்கிரஸின் வெற்றிக்கு இலங்கை தெரிவித்த காரணம் நிராகரிப்பு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதங்கள் பிரயோகிப்பதை நிறுத்துவதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம், இந்திய அரசாங்கம் கடந்த வருட தேர்தலின் போது தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவியது என்று உயர் மட்ட இலங்கை அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது .
இந்திய தேர்தல் முடிவுகளில் இலங்கை விவகாரத்திலும் பார்க்க உள்ளுர் அரசியல், பொருளாதார காரணிகளே ஆதிக்கம் செலுத்தின என்று காங்கிரஸ் பேச்சாளர் ஸ்ரீ சத்யவ்றாத் சதுர்தேவி தெரிவித்துள்ளார். தேர்தலின் போது கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழகம், செல்வி ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் ஆகிய இரண்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரம் இரண்டு கட்சிகளினாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது காரணியாகும். தேர்தலில் இது எந்தவொரு கட்சிக்கும் அனுகூலத்தை இது ஏற்படுத்தவில்லை என்று சதுர்தேவி தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்திதின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுத பாவனையை நிறுத்தவதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதன் மூலம் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி கடந்த வருட தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவினார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "காங்கிரஸின் வெற்றிக்கு இலங்கை தெரிவித்த காரணம் நிராகரிப்பு"
แสดงความคิดเห็น