அடிக்கல் நாட்டு வைபவம்
யாழ் .கொக்குவில் தெற்கு பிடாரி அம்மன் கோவில் கலை கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம். (16) காலை 11.05 க்கு இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கலை கலாசார மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
மேற்படி கோவிலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
பிடாரி அம்மன் கோவில் நிதியைக் கொண்டு இம் மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இம்மண்டபத்தை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு 10 மில்லியன் ரூபா நிதி செலவாகுமெனத் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஏனைய நிதி உதவிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதாக கோவில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கத் தான் தயார் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "அடிக்கல் நாட்டு வைபவம்"
แสดงความคิดเห็น