யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களைக் கௌரவப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படாது பார்த்துக்கொள்ளும் அதேவேளை தொழிலாளர்களும் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (16) காலை யாழ். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.
வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கம் மாநகர சபையில் கடமையாற்றும் தொழிலாளர்களின் சார்பில் 14 கோரிக்கைகளை மாநகர சபை நிர்வாகத்திடமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமும் முன்வைத்தமையைத் தொடர்ந்து இன்று காலை தொழிலாளர்கள் ஊழியர்கள் துறைசார் அதிகாரிகளை உள்ளடக்கிய இக்கலந்துரையாடல் யாழ்.மாநகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற சமயம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
மாநகரத்தை தூய்மையான நகரமாக மாற்றியமைப்பதே தமது கொள்கையென்றும், இதனை நிறைவேற்றுவதற்கு மாநகர சபைத் தொழிலாளர்களும் ஏனைய ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது மாநகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகர சபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களும் ஊழியர்களும் துறைசார் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாநகர சபைத் தொழிலாளர்களும், ஊழியர்களும், பொதுமக்களும் டெங்கு நோயை கட்டுப்படுவதிலுள்ள சமூக நலன்களை கருத்திற்கொண்டு உணர்வுப் பூர்வமாக செயலாற்ற முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 14 கோரிக்கைகளில் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன் மீதமான கோரிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதி கூட்டத்தில் பரிசீலிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இன்றைய இக்கலந்துரையாடலின் போது யாழ். மாநகர சபை ஆனையாளர் மாநகர சபை செயலாளர் மாநகர சபை உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்"
แสดงความคิดเห็น