தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றது � அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை மேலும் செழுமைப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக் காண முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எம்மோடு இணக்கம் கண்டதற்கிணங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே அவரை வெற்றி பெறச் செய்ய எமது மக்கள் வாக்களிக்க வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் ஏற்பாட்டில் இன்று (17) கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை பற்றியும் அன்றாட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு கௌரவமான தீர்வு காண்பது பற்றியும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை. அவரது தேர்தல் விஞ்ஞாபனமும் எமது அடிப்படை விடயங்களை உள்ளடங்கி இருக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடானது தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லை. மாறாக தற்போதுள்ள நிலைமையை குழப்பியடித்து தமிழ் மக்களுக்கு மேலும் அவலங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காயும் சுயலாப அரசியல் நடத்தவே கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர். எனவே புதிதாக எதையும் கொண்டு வரப்போகின்றோம் என்பதும் சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களின் அரசியலுமைப் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாடு கண்டுள்ளோம் என்றும் கூட்டமைப்பினர் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லை. எனவே தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகும். அதில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இப்பொதுக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர் சீரவரத்தினம் கி.பி மற்றும் கொக்குவில் பகுதி ஆசிரியர்கள் சிறப்புரை ஆற்றியமை என்பதும் குறிப்பிடத்தக்கது. |
0 Response to "தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றது � அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น