jkr

செனல் - 4 விவகாரம் : உயர் அதிகாரி ஒருவர் விரைவில் லண்டன் விஜயம்


செனல் - 4 ஊடக நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில், உயரதிகாரி ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாக இணையத் தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அந்தச் செய்தியில் மேலும்,இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் செனல் - 4 ஊடகம், போலியான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் சக்திகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்குக் குறித்த அதிகாரி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களைத் தடுப்பதற்கு சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செனல் - 4 விவகாரம் : உயர் அதிகாரி ஒருவர் விரைவில் லண்டன் விஜயம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates