இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு (வீடியோ படம் இணைப்பு)
இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்ந்திருப்பது போல அச்சிடப்பட்டிருந்தது. சாண்ட் விச் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வெண்ணை, இறைச்சி போன்றவற்றை வைத்து சுற்றப்பட்ட கலவை யாகும். இறைச்சி உணவு மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தைப் பார்த்ததும் அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வாஷிங்டனில் உள்ள இந்து அமைப்புகள் பர்கர்கிங் உணவு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறைச்சி மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தை இனி வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் இந்து கடவுளை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்குப்படியும் அமெரிக்கா வில் உள்ள இந்து அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன.
0 Response to "இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு (வீடியோ படம் இணைப்பு)"
แสดงความคิดเห็น