மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி!!

சேலம் மாவட்டத்தில் புழக்கத்தில் விடப் பட்டுள்ள பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், அவற்றை கண்டறிவதற்கான இயந்திரங்களையும் ஏமாற்றி விடுகின்றன. அத்தகைய ரூபாய் நோட்டுகளை தெரியாமல் வாங்கி விடும் வியாபாரிகளும், தொழிலாளர்களும் நஷ்டம் அடைகின்றனர். அதனால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பெறவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான், நேபாள நாடுகளில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்கள், தற்போது இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும்படி, வர்த்தக நிறுவனங்களுக்கு, தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் ரிசர்வ் வங்கி, விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த எச்சரிக்கை காரணமாக, அதிகளவில் பணப் புழக்கத்தில் ஈடுபடும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும், கள்ள நோட்டு கண்டறியும் மெஷின்களை வைத்து வருகின்றனர். ஆனாலும், அந்த மெஷின்களால் கள்ள நோட்டுக்களை எளிதில் அடையாளம் காண முடிவது இல்லை.
வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வங்கியில் செலுத்தப்படும் நோட்டுக்களின் எண்களை மட்டும் வங்கிகள் குறித்து, அந்த நோட்டுக்களை சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள தங்களது தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
“கள்ள நோட்டு’ என்று கண்டறியப்பட்ட நோட்டுகளில், நாற்புறமும் துளைகள் போட்டு, அதில் “போர்ஜ்டு’ என பிரிண்ட் செய்து அனுப்பி விடுகின்றனர். இந்த நோட்டுக்களை, கிளை வங்கிகள், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களிடம் தெரிவித்து விட்டு, அதற்கான தொகையை அவர்களது கணக்கில் இருந்து கழித்து விடுகின்றனர்.
அதனால், வர்த்தக நிறுவனத்தினர் பலர், தங்களின் தினசரி லாபத்தில் 10 முதல் 30 சதவீதம் வரை நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நோட்டுக் களை, தெரியாமல் வாங்கி விடும் தினக்கூலிகள், நடுத்தர குடும்பத்தினர், என்ன செய்வதென தெரியாமல், பெரும் விரக்திக்கு ஆளாகி விடுகின்றனர். இப்பிரச்னையால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பெறவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 Response to "மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி!!"
แสดงความคิดเห็น